Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வட கொரியாவில் ஏற்பட்டுள்ள நோய்ப்பரவலை அணுக்கமாகக் கண்காணிக்கும் சீனா

வாசிப்புநேரம் -

வட கொரியாவில் ஏற்பட்டுள்ள நோய்ப்பரவலை அணுக்கமாகக் கண்காணிப்பதாக சீனா கூறியிருக்கிறது.

பெய்ச்சிங், தொடர்ந்து Pyongyangஉடன் தொடர்பில் இருக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian கூறினார்.

சீனக் குடிமக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், வட கொரியாவுக்குத் தேவையான உதவிப்பணிகளைத் தயார்படுத்துவதற்கும் அது வகைசெய்யும்.

சீனாவும் வட கொரியாவும் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதாகத் திரு. Zhao சொன்னார்.

வட கொரியாவின் கிருமித்தொற்று நிலவரத்தைப் பற்றி சீனா ஆழந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வட கொரியாவின் ஒரே நட்பு நாடாக சீனா திகழ்கிறது.

அதே வேளையில் சீனாவின் பல நகரங்களில் Omicron நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் பரவுகிறது.

தலைநகர் பெய்ச்சிங்கில் 3 நாளுக்குப் பெரிய அளவிலான கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிடப்படுகிறது.

ஆகவே குடியிருப்பாளர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும்.

Shanghai நகரில் ஒரே நாளில் புதிதாய் 1,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 6ஆவது வாரமாக முடக்கநிலை தொடர்கிறது.

- Reuters


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்