Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் முதல் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவம்

வாசிப்புநேரம் -

சீனாவில் முதன்முறையாக ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் சோங்சிங் (Chongqing) சென்றுசேர்ந்ததும் தனிமைப்படுத்தப்பட்டதால் அவரிடமிருந்து குரங்கம்மை பரவும் சாத்தியம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகச் சீனா தெரிவித்தது.

கிருமித்தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபருக்குச் சருமத்தில் அரிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் சுமார் 90 நாடுகளில் குரங்கம்மைத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகச் சுகாதார நிறுவனம் அதை ஒரு சுகாதார நெருக்கடியாக அறிவித்திருக்கிறது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்