Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் உணவகத்தில் பெண்களைத் தாக்கிய ஆடவருக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை

வாசிப்புநேரம் -

சீனாவில் உணவகம் ஒன்றில் பெண்கள் தாக்கப்பட்டதன் தொடர்பில் முக்கியக் குற்றவாளிக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென் ஜிஸி (Chen Jizhi) என்ற ஆடவர் தலைநகர் பெய்ச்சிங்கிற்குக் கிழக்கே உள்ள டாங்ஷான் (Tangshan) வட்டாரத்தில் உள்ள ஓர் உணவகத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.

அதற்கு அந்தப் பெண்கள் மறுப்புத் தெரிவித்தபோது சென்னும் அவரின் நண்பர்களும் அந்தப் பெண்களை நாற்காலிகள், போத்தல்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த 4 பெண்களும் லேசாகக் காயமுற்றனர்.

அது குண்டர் கும்பல் தொடர்பான குற்றம் என அதிகாரிகள் கூறினாலும் பலரும் அது நாட்டில் மேலோங்கி இருக்கும் பாலியல் வன்முறையைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.

சென் பொதுமக்களை அச்சுறுத்திய குண்டர் கும்பல் ஒன்றின் தலைவர் என்றும் அவர் 2012ஆம் ஆண்டிலிருந்து குற்றங்கள் புரிந்திருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு சுமார் 64,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

சம்பவத்தின் தொடர்பில் மேலும் 27 பேருக்கு 6 மாதங்கள் முதல் 11 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்