Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன, ரஷ்யப் போர் விமானங்கள் ஜப்பானுக்கு அருகே கூட்டுப் பயிற்சி

வாசிப்புநேரம் -

சீனாவையும் ரஷ்யாவையும் சேர்ந்த போர் விமானங்கள், ஜப்பானுக்கு அருகே கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தோக்கியோவுக்கான பயணத்தை நிறைவுசெய்துள்ள வேளையில் அந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.

அந்தப் பயிற்சி, சினமூட்டும் நடவடிக்கை என்று அமெரிக்காவும் ஜப்பானும் கூறின.

ஆனால் ஆசியப் பசிபிக் வட்டாரத்தைச் சுற்றுக்காவல் செய்வதே இலக்கு என்று ரஷ்யா பதிலளித்தது.

2019ஆம் ஆண்டிலிருந்து வருடாவருடம் மேற்கொள்ளப்படும் ராணுவப் பயிற்சியின் ஓர் அங்கமாக விமானங்கள் பறந்ததாக சீனா கூறியது.

அந்தச் சம்பவத்தால், ஜப்பானும் தென்கொரியாவும் அவற்றின் விமானங்களையும் செயல்படுத்தின.

உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த பிறகு சீனாவும் ரஷ்யாவும் இணைந்து நடத்தியிருக்கும் முதல் கூட்டு ராணுவப் பயிற்சி அது.

மாஸ்கோவுக்குப் பெய்ச்சிங் ஆதரவாக இருப்பதை அது காட்டுவதாக வாஷிங்டன் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்