Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'சீன அரசாங்கத்தின் வேவுப் பணிகள் அதிகரித்துள்ளன'

வாசிப்புநேரம் -

சீன அரசாங்கத்தின் வேவுப் பணிகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவும் பிரிட்டனும் எச்சரித்துள்ளன.

லண்டனில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில், அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநர் கிறிஸ்டபர் ரேயும் (Christopher Wray), MI5 எனும் உளவுத்துறை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கென் மெக்கெல்லமும் (Ken McCallum) அந்தத் எச்சரிக்கையை விடுத்தனர்.

மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து மதிநுட்பச் சொத்துகளை ஊடுருவதிலும் திருடுவதிலும் சீனா ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை இல்லாத வகையில் இம்முறை சீனாவின் உளவு நடவடிக்கை கடுமையான சவாலாய் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளை-விட, இம்முறை அவை 7 மடங்கு அதிகரித்துள்ளன.

பெய்ச்சிங், தைவானை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தால், அதன் மீது விதிக்கப்படக்கூடிய தடைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள, பல்வேறு முயற்சிகளில் அது ஈடுபடுவதாக அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்