சீன வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவிற்குப் பயணம்

(படம்: AFP PHOTO / Russian Foreign Ministry / handout)
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) பாதுகாப்பு அம்சங்கள் குறித்துப் பேச்சு நடத்த ரஷ்யா சென்று சேர்ந்துள்ளார்.
இருதரப்பு உயர்நிலைச் சந்திப்புகளின் வரிசையில் அவருடைய பயணம் அமைந்திருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லவ்ரோவுடன் (Sergey Lavrov) திரு. வாங் ஆலோசனை நடத்தினார்.
ரஷ்யா செல்வதற்கு முன், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனைப் (Jake Sullivan) பெய்ச்சிங்கில் சந்தித்துப் பேசினார் திரு. வாங்.
வெளிப்படையான, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பாக அது அமைந்தது என்று திரு. வாங் கூறினார்.
-AFP