Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் நீரிணையில் சீன ராணுவப் பயிற்சிகள் நிறைவு - இனி அத்தகைய பயிற்சிகள் வழக்கமாகிவிடும் என்கிறது சீனா

வாசிப்புநேரம் -
தைவான் நீரிணையில் சீன ராணுவப் பயிற்சிகள் நிறைவு - இனி அத்தகைய பயிற்சிகள் வழக்கமாகிவிடும் என்கிறது சீனா

(படம்: Hector RETAMAL / AFP)

தைவான் நீரிணையைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட சீன ராணுவப் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.

அந்தப் பயிற்சிகள் வெற்றிகரமாய் முடிவுற்றதாகச் சீனத் தலைநிலத்தைச் சேர்ந்த கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

தைவானின் Patriot ரக ஏவுகணை முறை தற்காக்கும் பகுதிகளில் முதல்முறையாக உண்மையான குண்டுகளைப் பயன்படுத்திப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. 

தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களிலும் முதன்முறையாகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே,  தைவான் நீரிணையில் உள்ள எல்லைக் கோட்டுக்கு அருகே இனி வழக்கமாக ராணுவப் பயிற்சிகள் நடத்தப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சினமூட்டும் நடவடிக்கைகள் அதிகரித்தால், தைவான் சீனத் தலைநிலத்திடமிருந்து மேலும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எதிர்நோக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நடத்தப்பட்ட ராணுவப் பயிற்சிகளில் 66 சீனப் போர் விமானங்களும் 14 போர்க்கப்பல்களும் ஈடுபட்டிருந்ததாகத் தைவான் தெரிவித்தது.

இருதரப்பிலிருந்தும் பல போர்க்கப்பல்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்