Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'நாங்கள் எப்போதும் அனைத்துலகச் சட்டத்தை மதித்துநடக்கிறோம்' - சீனா

வாசிப்புநேரம் -

சீனா தான் எப்போதும் அனைத்துலகச் சட்டத்தை மதித்துநடப்பதாகக் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரத்தில் சீன வேவுக் கப்பல் காணப்பட்டது.

அந்த நடவடிக்கை கவனிக்கப்படவேண்டியது என்றும் சினமூட்டும் வகையில் அமைவதாகவும் ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் கூறியதையடுத்து சீனா கருத்துரைத்துள்ளது.

உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்த அந்தக் கப்பல் எளிதில் உணரக்கூடிய தற்காப்பு அமைப்புகளுக்கு அருகே கடந்து சென்றதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.

அந்த அமைப்புகள் அமெரிக்காவுக்கும் ஏனைய நட்பு நாடுகளுக்கும் ஆதவரளிக்கின்றன.

ஆஸ்திரேலியா அமைதியாகச் செயல்படவேண்டும் என்று சீனா கூறியிருக்கிறது.

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பயமுறுத்தும் சொற்களைப் பயன்படுத்தவேண்டாம் என்று அது சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்