Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கள்ள உறவு காரணமாகப் பதவி நீக்கம்: தகவல்

வாசிப்புநேரம் -
சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு சின் காங் (Qin Gang) கள்ள உறவு காரணமாக ஜூலை மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக Wall Street Journal செய்தி நிறுவனம் இன்று (19 செப்டம்பர்) தெரிவித்துள்ளது.

திரு. சின் (Qin) சீனாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்தபோது கள்ள உறவு வைத்திருந்ததால் சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

கள்ளத் தொடர்பினால் அவருக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திரு சின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாகத் திரு. வாங் யீ (Wang Yi) புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்