Skip to main content
சவுதி அரேபிய மன்னரைக் காண ரியாத்துக்குச் செல்லும் சீன அதிபர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

சவுதி அரேபிய மன்னரைக் காண ரியாத்துக்குச் செல்லும் சீன அதிபர்

வாசிப்புநேரம் -
சவுதி அரேபிய மன்னரைக் காண ரியாத்துக்குச் செல்லும் சீன அதிபர்

(கோப்புப் படம்: Pang Xinglei/Xinhua via AP)

சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) சவுதி அரேபிய மன்னரைக் காண ரியாத்துக்குச் செல்கிறார்.

சீனாவுக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்துக்கும் இடையிலான உச்சநிலை மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் 30 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட எரிசக்தி தொடர்பான கட்டமைப்பை மேம்படுத்துவதன் தொடர்பிலான உடன்படிக்கைகளில் சீனாவும் சவுதி அரேபியாவும் கையெழுத்திடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சவுதி கார்களிலும் ஆயுத உற்பத்தியிலும் சீனா முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிசக்திக் கொள்கை, வட்டாரப் பாதுகாப்பு, மனித உரிமைகள் ஆகிய விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திரு. சியின் பயணம் இடம்பெறுகிறது.

எண்ணெய் உற்பத்தியின் தொடர்பில் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இன்னும் இணக்கம் காணவில்லை.

மேலும் செய்திகள் கட்டுரைகள்