Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் வீசும் மணல் புயல் தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பரவக்கூடும் என அச்சம்

வாசிப்புநேரம் -
சீனாவில் வீசும் மணல் புயல், பக்கத்து நாடுகளான தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் காற்றில் தென்படும் நுண்ணிய மாசுத் துகள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தென்கொரியாவில் காற்றின்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை அமைப்பு எச்சரித்தது.

இந்நிலையில் ஜப்பானிய அதிகாரிகள், சீனாவிலிருந்து வரும் மணல் புயல், இன்று பின்னேரத்தில் நாட்டை அடையக்கூடும் என்று கருதுகின்றனர்.

தலைநகர் தோக்கியோ உட்பட நாட்டின் மத்திய வட்டாரத்தில், பார்க்கும் தொலைவு பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்