Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காப்பி வேண்டுமா? 'auntie' என்று அழைக்காதீர்கள்!

வாசிப்புநேரம் -

'18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்கப்படமாட்டாது' என்பதுபோல வயதுவரம்பு சம்பந்தப்பட்ட அறிக்கைகளைக் கடைகளில் பெரும்பாலும் காணலாம்.

தைவானில் காப்பிக் கடையை நடத்திவரும் பெண் ஒருவர் வித்தியாசமான செயலுக்கு வயதுவரம்பு விதித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அவரை 'auntie' என்று அழைக்கக்கூடாதாம்.

அதுகுறித்த அறிக்கை ஒன்று கடையின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

கடைக்குச் சென்ற ஃபூயென் சென் (Fuyen Chen) என்ற ஆடவர் தம்முடைய அனுபவம் குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.

கடையில் பாலும் கோழியும் வாங்க எண்ணிய சென், விற்பனையாளரை 'auntie' என்று அழைத்தார்.

அவரோ கண்டுகொள்ளவில்லை.

வாடிக்கையாளர்கள் தம்மை வயதானவர்போல் நடத்துவதை அவர் விரும்பவில்லை என்று சென் அறிந்தார்.

அவர் பெண்ணை 'அழகிய பெண் முதலாளி' என்று அழைத்தார். 

பெண் அப்போதுதான் சென்னிடம் பேசினார்.

'உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களுக்காகவே அறிக்கை தயார்செய்யப்பட்டது,' என்று அவர் கூறினார்.

இணையவாசிகள் சிலர் சென்னின் பதிவுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.

பெண்களை 'அக்கா' என்றும் ஆண்களை 'அண்ணன்' என்றும் அழைப்பதே சிறந்தது எனச் சிலர் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்