Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆசியானின் COVID-19 ஒத்துழைப்புத் திட்டத்தை வழிநடத்தும் சிங்கப்பூர், கம்போடியா

வாசிப்புநேரம் -
ஆசியானின் COVID-19 ஒத்துழைப்புத் திட்டத்தை வழிநடத்தும் சிங்கப்பூர், கம்போடியா

(கோப்புப் படம்: AFP/Romeo Gacad)

ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள், நோய்ப்பரவலிலிருந்து இந்த வட்டாரம் மீண்டு வருவதற்குத் தொடர்ந்து ஒத்துழைக்கக் கடப்பாடு தெரிவித்துள்ளனர்.

தகவல்களையும் படிப்பினைகளையும் பரிமாறிக்கொள்ள ராணுவ, சுகாதார வல்லுநர்களின் கட்டமைப்பை அமைப்பதும் அதில் அடங்கும்.

சிங்கப்பூரும் கம்போடியாவும் COVID-19 ஒத்துழைப்புத் திட்டத்தை இணைந்து வழிநடத்தவிருக்கின்றன.

புனோம் பென்னில் (Phnom Penh)  நடைபெற்ற ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் வட்டாரப் பாதுகாப்புக்கான ஒருமைப்பாட்டை வலுப்படுத்த, தற்காப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுப் பிரகடனம் செய்யப்பட்டது.

உத்திபூர்வக் கலந்துரையாடல்களை மேம்படுத்த ஆசியான் கொண்டுள்ள கடப்பாட்டை அது மறுவுறுதிப்படுத்துவதாக சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சு சொன்னது.

ஈராண்டுகளுக்குப் பிறகு ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு நேரடியாக நடத்தப்பட்டது.

இணையம், தகவல் தரவு ஆகியவற்றில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்களைப் பற்றி ஆசியான் கலந்துபேசுவதற்குச் சந்திப்பு முக்கியம் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen)  கூறினார்.

தென் சீனக் கடல் விவகாரம் பற்றியும் அதில் கலந்துபேசப்பட்டது.

டாக்டர் இங் சீன, ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர்களுடனும் பேசினார்.

கம்போடியாவின் துணைப் பிரதமரும் தேசியத் தற்காப்பு அமைச்சருமான தீ பான்னையும் (Tea Banh) அவர் சந்தித்தார்.

அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான தற்காப்பு உறவுகளை மறுவுறுதிப்படுத்தினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa