இந்தியா : மாடுகளைக் கடத்தியவருக்கு ஆயுள்தண்டனை

மாட்டுச்சாணத்தால் பூசப்பட்ட வீடுகள் அணுக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல்மிக்கவை என்று இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குக் குஜராத்தில் சில மாடுகளைக் கடத்திச் சென்று கொல்லத் திட்டமிட்டதாக ஒருவர்மீது குற்றஞ்சாட்டிருந்தது.
குஜராத் மாநிலத்தில் மாடுகளைக் கொல்வது சட்டவிரோதம்.
விசாரணையில் அந்த 22 வயது ஆடவரின் செயல் மிகுந்த ஏமாற்றமளிப்பதாகக் கூறிய முதன்மை நீதிபதி, மாடுகளைக் கொல்வதால் உலகில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று சொல்லி அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தார்.
"மாடுகளின் துளி ரத்தம்கூட சிந்தாத நாளில் உலகின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்"
என்று நீதிபதி சமிர் விநோதசந்திர வியாஸ் (Samir Vinodchandra Vyas) குறிப்பிட்டார்.
"மாட்டுச்சாணம் அணுக்கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கக்கூடியது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது. மாட்டின் சிறுநீரை அருந்துவதால் தீர்க்க முடியாத உடல்நலக் கோளாறுகள் தீரும்"
என்றும் நீதிபதி சொன்னார்.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது பற்றிய செய்தி சென்ற வாரம்தான் வெளியிடப்பட்டது.