Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இடிபாடுகளில் சிக்கிக்கொண்டோரைக் கண்டுபிடிக்கும் கரப்பான்பூச்சிகள்...எப்படிச் சாத்தியம்?

வாசிப்புநேரம் -

நிலநடுக்கம்....

ஓர் இடத்தில் ஏற்பட்டால், இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டோரைக் கண்டுபிடிப்பது பெரும்பாடு!

ஆனால் சைபோர்க் (cyborg ) எனும் அசாதாரண திறன்கொண்ட கரப்பான்பூச்சிகள் அவர்களை எளிதில் கண்டுபிடித்துவிடும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள்.

எப்படி?

முடியை விட 25 மடங்கு மெலிதான நெகிழும் தன்மை கொண்ட ஒரு சூரியச்சக்தித் தகடு பூச்சியின் அடிவயிற்றில் பொருத்தப்படும். 

அதனால் கரப்பான்பூச்சி எளிதாக எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். சூரியச்சக்தித் தகடு அது எங்கெல்லாம் செல்கிறதோ அதைக் கண்டுபிடித்து சமிக்ஞை அனுப்பும். 

ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனமான ரிக்கனின், ஆய்வாளர்கள் அதனைக் கண்டுபிடித்துள்ளனர். 

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முன்பு நடத்தப்பட்ட பூச்சி தொடர்பான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் சைபோர்க் பூச்சிகளால் இயந்திர மனிதக் கருவிகள்கூட புகமுடியாத அபாயகரமான பகுதிகளுக்குள் நுழைய முடியும் என்று நம்பப்படுகிறது.

சிறிதாக இருப்பதாலும் இறக்கைகள் இல்லை என்பதாலும் ஆராய்ச்சிக் குழு, மடகாஸ்கர் கரப்பான்பூச்சிகளைச் சோதனைக்குத் தெரிவுசெய்துள்ளது.

பேரிடர்கால உபயோகத்துக்கு அப்பால், பூச்சிகளில் பொருத்தப்படும் சூரியச்சக்தித் தகடுகளை மற்ற பல துறைகளிலும் பயன்படுத்த முடியுமா என்பதை ஆய்வுக் குழு ஆராய்கிறது. 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்