மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட உடல் - வெளிநாட்டு ஆடவர் என அடையாளம்

Bernama
மலேசியாவின் வடக்கு - தெற்கு விரைவுச்சாலையோரம் கறுப்புப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட வெட்டப்பட்ட உடல் ஒரு வெளிநாட்டு ஆடவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் அதனைக் காட்டுவதாகக் கூறப்பட்டது.
கூர்மையான பொருள்களால் ஏற்பட்ட காயங்களாலும் அடியினாலும் அவர் மாண்டதாக சுங்கை புலோ மாவட்டக் காவல்துறைத் தலைமை அதிகாரி தெரிவித்தார்.
அந்த ஆடவரின் அடையாளத்தை நிர்ணயிக்க விசாரணை நடைபெறுகிறது.
அவர் முஸ்லிம் அல்லாதவர் என்று நம்பப்படுகிறது.
ஆனால் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படவில்லை,
துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் இருந்த பெட்டி நேற்று முன்தினம் (17 ஜனவரி) பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.