Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குரங்கம்மை பரவும் அபாயத்தைக் குறைக்க வெளிநாட்டினரைத் தொடாதீர்: சீனா

வாசிப்புநேரம் -
குரங்கம்மை பரவும் அபாயத்தைக் குறைக்க வெளிநாட்டினரைத் தொடாதீர்: சீனா

(படம்: AP Photo/Richard Vogel)

குரங்கம்மைத் தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க வெளிநாட்டவர்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறு சீனாவின் மூத்த சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த 3 வாரங்களில் வெளிநாட்டிற்குச் சென்றுவந்தவர்களையும் அந்நியர்களையும் தொடுவதைத் தவிர்க்குமாறும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையத்தின் தலைமை நிபுணர் வூ ஜுன்யூ (Wu Zunyou) அவரின் Weibo பக்கத்தில் தெரிவித்தார்.

சமூக அளவில் குரங்கம்மைப் பரவலைத் தடுப்பதையும் கண்காணிப்பதையும் வலுப்படுத்துவது அவசியமான, மிகவும் முக்கியமான ஒன்று என்றார் அவர்.

அண்மையில் சீனாவில் முதல் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவம் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்றும் அவர் சோங்சிங் (Chongqing) சென்றுசேர்ந்ததும் தனிமைப்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்