Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"நோன்பு துறக்கும்போது உணவை வீணாக்காதீர்கள்" - மலேசிய மாமன்னர்

வாசிப்புநேரம் -
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும்போது உணவை வீணடிக்க வேண்டாமெனத் தமது நாட்டு முஸ்லிம்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் நோன்பு துறக்கும்போது வீணாகும் உணவுப் பொருள்களே, ரமலான் மாதத்தில் உருவாகும் உணவுக் கழிவில் பெரும்பகுதி என்று அவர் சொன்னார்.

அவ்வாறு உணவை வீணடிப்பது ரமலான் வலியுறுத்தும் நற்பண்புகளுக்கு எதிரானது என்றார் மலேசிய மாமன்னர். நோன்பு மாதம் என்பது மக்களுக்குச் சிக்கனத்தைக் கற்றுத்தர வேண்டுமே தவிர உணவை வீணடிப்பதற்கு அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

அறச் செயல்களை அதிகரிக்கும்படியும் மிதமிஞ்சிச் செலவு செய்வதைத் தவிர்க்கும்படியும் மலேசிய முஸ்லிம்களை மாமன்னர் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்