Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

நெருங்கும் உலகக் கிண்ணக் காற்பந்து....தயாராகும் துபாய் விமானநிலையம்

வாசிப்புநேரம் -

கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி துபாய் விமான நிலையம் பரபரப்புக்குத் தயாராகிறது.

மத்திய கிழக்கின் முக்கிய விமான நடுவமாக விளங்குகிறது துபாய் அனைத்துலக விமான நிலையம். 

அதனால் பல்லாயிரம் காற்பந்து ரசிகர்கள் அதன் வழி கத்தார் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளுக்கான நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்த வளைகுடா நாடுகள் இணங்கியுள்ளன. 

வழக்கமான நடைமுறைகளை விடுத்துப் பயணிகள் எளிமையாகக் கடந்துசெல்ல அவை வழிவகுக்கவிருக்கின்றன. 

கோவிட்-19 பரவலுக்குமுன் உலகின் ஆகச் சுறுசுறுப்பான விமான நிலையமாக துபாய் இருந்தது. 

கத்தாருக்கு விளையாட்டுகளைக் காணச் செல்வோர் துபாய்க்குத் திரும்பி உல்லாசமாக நாளைக் கழிக்க விரும்பலாம். அவர்களுக்கு வசதியாக அன்றாடம் பல விமானங்கள் சேவை வழங்கும் என்று துபாய் தெரிவித்தது. 

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 27.8 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. கோவிட் காலக்கட்டத்துக்குமுன் 2019ஆம் ஆண்டின் அந்தக் காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் அது 67.5 விழுக்காடு அதிகம். 

-AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்