Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் முட்டைப் பற்றாக்குறையால் உணவையே மாற்றும் உணவகங்கள்

வாசிப்புநேரம் -
ஜப்பான் பறவைக்காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குப் படாத பாடுபடுகிறது.

17 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டதால் முட்டைக்கு அங்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதனால் முட்டை சேர்க்கப்படும் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

உணவகங்கள் வேறு வழியின்றி உணவிலிருந்து முட்டையை நீக்குகின்றன அல்லது மாற்று வழிகளை நாடுகின்றன.

சென்ற மாதம் ஜப்பானில் உள்ள McDonald's உணவகம் முட்டை கொண்ட அதன் பிரபல டெரிடாமா (Teritama) பர்கர்களின் விற்பனை உச்ச நேரத்தில் நிறுத்தப்படலாம் என்று சொன்னது.

பிப்ரவரி மாதம் முதல் 7-Eleven கடைகள் சுமார் 15 உணவுப் பொருள்களின் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக BBC குறிப்பிட்டது.

சில உணவகங்கள் காய்கறிகள் அல்லது மீனிலிருந்து செய்யப்பட்ட முட்டைகளை நாடுகின்றன.

பறவைக்காய்ச்சல் தணியும் அறிகுறி ஏதும் தெரியாததால் முட்டை உற்பத்தி முழுமையாக மீட்சி காணாது என்று துணை ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்