Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவிருந்த Grand Prix போட்டி ரத்து

வாசிப்புநேரம் -
அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவிருந்த Grand Prix போட்டி ரத்து

Greg Baker / AFP

Formula One, அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவிருந்த சீன Grand Prix போட்டியை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது.

சீனாவின் COVID-19 முடக்கநிலைக்கு அது மேலும் ஓர் அடியாகக் கருதப்படுகிறது.

ஷங்ஹாயில் (Shanghai) அடுத்த ஆண்டு போட்டி நடக்க வேண்டியது.

ஷங்ஹாய் போட்டி ரத்து செய்யப்படுவது இது நாலாவது முறை.

சீனாவின் COVID-19 நிலவரம் போட்டியை நடத்துவதற்குத் தடையாக இருப்பதாக Formula One சொல்கிறது.

இதற்கிடையே சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) COVID-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முன்வருவதாகக் கோடி காட்டியிருக்கிறார்.

அதிகாரத்துவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் அந்தத் தகவலைத் தந்தது.

கடந்த வாரத்தில் முடக்கநிலைக்கு எதிராகப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் அதிபர் சி பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்