Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் மரணம்... மனிதச் செயலும் முக்கியக் காரணம்

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் மரணம்... மனிதச் செயலும் முக்கியக் காரணம்

(படம்: Hafrijal Syandri)

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள மானிஞ்சாவ் (Maninjau) ஏரியில், கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் மாண்டு மிதக்கக் காணப்பட்டுள்ளன. 

சென்ற மாதத்தில் 1,700 டன்னுக்கும் அதிகமான மீன்கள் மாண்டுபோனதாகக் கூறப்பட்டது. 

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட எதிர்பாரா மோசமான வானிலை, மீன்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக அந்த வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர். 

தஞ்சோங் ராயா (Tanjung Raya) பகுதி எப்போதுமே, நவம்பர் முதல் பிப்ரவரி மாதம்வரை,
கனத்த மழை, பலத்த காற்று, நிலச் சரிவு, கூட்டம் கூட்டமாக மீன்கள் மாண்டுபோவது-போன்றவற்றைச் சந்திப்பதுண்டு என அவர்கள் குறிப்பிட்டனர். 

மனிதச் செயலும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

அளவுக்கு மீறி மீன் பிடிப்பது, ஏரியில் உள்ள மீன்களுக்கு அளவுக்கு மீறித் தீனி போடுவது-போன்றவையும் மீன்கள் மடியக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. 

மீன்களுக்கு அதிகமான தீனி போடப்பட்டதால், ஏரி நீர் மாசடைந்ததாகவும் நம்பப்படுகிறது. 

மீன் உணவுத் துகள்கள், ஒரு படலம்போல் ஏரியை மூடி, மீன்களுக்குக் கிடைக்கும் உயிர்வாயுவைக் குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

மீன்கள் கூட்டம் கூட்டமாக மடிவதைத் தடுப்பதற்கு
உள்ளூர் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். 

- CNA/ks(ih)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa