Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூரில் வெள்ளம் வடிகிறது; முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

வாசிப்புநேரம் -
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்டிருந்த வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி அங்கு 2 மாவட்டங்களைச் சேர்ந்த 21,127 பேர் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு (17 மார்ச்) அந்த எண்ணிக்கை 23,000க்கும் அதிகமாக இருந்தது.

பத்து பாஹாட் (Batu Pahat), செகாமாட் (Segamat) ஆகிய 2 மாவட்டங்களில் 83 முகாம்கள் செயல்படுகின்றன.

பத்து பாஹாட் மாவட்டத்தில் மட்டும் 6,000க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வானிலையைப் பொறுத்தவரை பிரச்சினையில்லை. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆறுகளில் நீரின் அளவு பாதுகாப்பாக உள்ளது.

எனினும் இன்னும் 5 சாலைகள் முழுமையாகப் போக்குவரத்துக்குத் திறக்கப்படவில்லை. இப்போதைக்கு அந்தச் சாலைகளில் கனரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவதாக Bernama தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்