ஆசியா exclusive
மலேசிய முன்னாள் அமைச்சர் சையது சாதிக்கிற்கு விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு - இளையர்கள் அதிர்ச்சி
வாசிப்புநேரம் -
மலேசிய முன்னாள் அமைச்சர் சையது சாதிக்கிற்கு (Syed Saddiq) விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மலேசிய இளையர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் திரு. சையத் சாதிக். அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பின் கடுமை குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சரான திரு. சையது சாதிக்கிற்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 2 பிரம்படிகளும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கை மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, நிதியைத் தவறாகக் கையாண்டது உள்ளிட்ட 4 குற்றாச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியிருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் திரு. சையது சாதிக் கூறியிருக்கிறார்.
வழக்கு ஒரு முடிவுக்கு வரக் கூடுதல் காலம் பிடிக்கலாம்.
அதுவரை திரு. சையது சாதிக் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்.
மலேசியாவின் எதிர்காலத் தலைவர்களில் ஒருவராகக் கூடியவர் என்று கூறப்பட்ட அவரின் அரசியல் வாழ்வில் இது பெரிய திருப்பம்; மேல்முறையீடு முடியும் வரை அவருக்கு இது போராட்டக் காலமாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Mediacorp Seithi