Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

7 மாதங்களாக வகுப்புக்கு வராத ஆசிரியருக்கு எதிராக வழக்குத் தொடுத்து 150,000 ரிங்கிட் இழப்பீடு பெற்ற முன்னாள் மாணவர்கள்

வாசிப்புநேரம் -
மலேசியாவின் சபா மாநிலத்தில் முன்னாள் மாணவர்கள் 3 பேர் தங்களது ஆசிரியருக்கு எதிராக வழக்குத் தொடுத்து 150,000 ரிங்கிட் (43,650 வெள்ளி) இழப்பீடு பெற்றுள்ளனர்.

அவர்கள் ஆளுக்கு 50,000 ரிங்கிட் பெறுவார்கள் என்று நீதிமன்றம் அறிவித்தது.

ருஸியா சப்டாரின் (Rusiah Sabdarin), நூர் நட்டாஷா அலிஸ்யா ஹமாலி (Nur Natasha Allisya Hamali) கெல்வினா அங்காயுங் (Calvina Angayung) ஆகிய அந்த 3 மாணவர்களும் கோத்தா பெலுட்டில் (Kota Belud) உள்ள இடைநிலைப்பள்ளியில் பயின்றனர்.

தற்போது அவர்களுக்கு 22 வயதாவதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

6 ஆண்டுகளுக்குமுன்னர் உயர்நிலை 4இல் பயின்றபோது தங்களுக்கு முறையான கல்வியை வழங்கத் தவறியதாக அவர்கள் 5 தரப்புகளுக்கு எதிராக வழக்குப் போட்டனர்.

7 மாதங்களாக வகுப்புக்கு வரத் தவறிய ஆங்கிலப் பாட ஆசிரியர், பள்ளித் தலைமையாசிரியர், கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் அரசாங்கத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2020இல் தொடுக்கப்பட்ட அவ்வழக்கில் மாணவர்கள் முன்வைத்த அனைத்து ஆதாரங்களையும் விளக்கங்களையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பளித்தது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்