Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானிலிருந்து தப்பி இந்தோனேசியாவுக்குச் சென்ற குற்றவாளி மீண்டும் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டார்

வாசிப்புநேரம் -

இந்தோனேசியா சுமத்ரா தீவில் கைது  செய்யப்பட்ட ஜப்பானியக் குற்றவாளியைத் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பியுள்ளது.  

மிட்சுஹிரோ தனிகுச்சி எனும் அந்த ஜப்பானியர்
கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர ஜப்பானிய நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதியில் 7.3 மில்லியன் டாலரைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவரும் அவரின் சகாக்களும் சுமார் 1,700 போலி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். 

அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அவர் இந்தோனேசியாவில் மீன் பண்ணை வணிகத்தைத் தொடங்கினார். 

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் ஜப்பானிலிருந்து தப்பி இந்தோனேசியா சென்றார். 

இம்மாதம் 4ஆம் தேதி குடிநுழைவுச் சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக அவர் இந்தோனேசியாவில் பிடிபட்டார். 

ஜப்பான் அவரின் கடப்பிதழை ரத்துசெய்துள்ளதால் வெளிநாட்டில் வசிக்கும் அனுமதி அவருக்கு இல்லை. 

அதனால் அவர் திருப்பியனுப்பப்படுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்