Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முழுமையாகத் தடுப்பூசி போட்ட சில நாட்டுப் பயணிகளுக்கு எல்லையைத் திறப்பது குறித்து மலேசியா பரிசீலனை

மலேசிய அரசாங்கம், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு எல்லையைத் திறந்துவிடுவதுபற்றிப் பரிசீலித்து வருகிறது.

வாசிப்புநேரம் -

மலேசிய அரசாங்கம், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு எல்லையைத் திறந்துவிடுவதுபற்றிப் பரிசீலித்து வருகிறது.

தேசிய மீட்பு மன்றத் தலைவர் முஹிதீன் யாசின் அதனைத் தெரிவித்தார்.

அந்தப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாள்கள் குறைக்கப்படும் அல்லது அகற்றப்படும் என்றார் அவர்.

கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் அன்றாட எண்ணிக்கை, மலேசியாவில் குறைந்துள்ளதை அவர் சுட்டினார்.

மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விகிதமும் உயர்வாக உள்ளது.

சாதகமான இந்த அம்சங்களின் அடிப்படையில், எல்லையை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிடுவதாகத் திரு. முஹிதீன் குறிப்பிட்டார்.

ஆனால், எந்தெந்த நாட்டுப் பயணிகளுக்கு அந்த அனுமதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.

இருப்பினும், தடுப்பூசிச் சான்றிதழ்களின் இருவழி அங்கீகாரத்துக்கு உடன்படும் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றுமட்டும் அவர் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்