Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அறுவடைத் திருநாள்.. இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில்!

வாசிப்புநேரம் -

அறுவடைத் திருநாள்..

இதை இந்தியாவில் மகர சங்கராந்தி என அழைப்பதுண்டு.

சூரியனை வழிபடும் தினமாகவும் அறுவடையைக் கொண்டாடும் நாளாகவும் அது பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அது வெவ்வேறு முறைகளில் வெவ்வேறு மாதங்களில்  அனுசரிக்கப்படுகிறது.

பொங்கல் (தமிழ்நாடு)

- தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

- போகிப் பொங்கல், சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள்களுக்குக் கொண்டாட்டம்.
(படம்: Envato Elements)
ஓணம் (கேரளா)

- கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

- ஆண்டின் அறுவடைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது

- ஒரு காலத்தில் கேரளாவை ஆட்சி செய்த மஹாபலி சக்கரவர்த்தி அன்றைய தினம் நினைவுகூரப்படுகிறார்.

- புராணக் கதைகளின்படி அவர் மக்களை ஓணம் தினத்தன்று மட்டும் சந்திப்பார் என்பது நம்பிக்கை.
(படம்: Facebook)
சுகி (கர்நாடகா)

- பெண்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்தாரைச் சென்று சந்திப்பர்.

- அவர்கள் உலர்ந்த தேங்காய், வறுத்த கடலை, வெல்லம், இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றைக் கொடுப்பார்கள்.

- கரும்பு அறுவடையின் தொடக்கத்தைக் கொண்டாட்டங்கள் குறிக்கின்றன.

- அந்த மாநிலத்தில் அதுவே ஆக முக்கிய விளைச்சல் என்று நம்பப்படுகிறது.
(படம்: Facebook/Urbana Kolkata)
லோரி (பஞ்சாப்)

- மகர சங்கராந்திக்கு முதல் நாள்

- வட இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.

- குளிர் காலத்தின் இறுதிநாளாக அது கருதப்படுகிறது

- குளிர் விடைபெறுவதைக் குறிக்க வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டி அதைச் சுற்றி மக்கள் ஆடி மகிழ்வர்.
(படம்: Instagram/@tahseenkarina)
வைசாகி (பஞ்சாப்)

- நல்ல அறுவடைக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லும் நாளாக அது அமைகிறது,

- சீக்கியர்களின் புத்தாண்டாகவும் அது கருதப்படுகிறது.

- பொதுவாக இது ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும்.

- வைசாகி ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஆகியவை அன்று இடம்பெறும்.
(படம்: Envato Elements)
உத்தரயனான் (குஜராத்)

- 2 நாள்களுக்கு அனுசரிக்கப்படும்.

- சூரிய வழிபாடு நடைபெறும்.

- அனைத்துலகப் பட்டம் விடும் விழா நடைபெறுவதால் "பட்டாங்" எனும் பட்டத்தைப் பறக்கவிடும் வாய்ப்பு கிடைக்கிறது.

- உத்தரயனான்போது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்வாக அது அமைகிறது.

- உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் இந்த அறுவடைத் திருநாளை கிச்சடி (Khichdi) என்று அழைக்கிறார்கள்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்