Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற மகள்; உண்மையை மறைத்த தந்தை

வாசிப்புநேரம் -
பள்ளியில் இடம் கிடைத்ததாகக் கூறும் கடிதம் வரும் என்று பெண் பல நாள்கள் காத்திருந்தார்.

அது கிடைக்காதபோது அவர் 9ஆவது வகுப்பில் படிப்பைக் கைவிட்டு... தொழிற்சாலையில் பணிபுரிய ஆரம்பித்தார்.

தாம் ஆவலுடன் எதிர்பார்த்த கடிதத்தைத் தந்தை மறைத்து வைத்திருந்தார் என்று அவர் 17 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்தார்.

சீனாவில் வாங் யான்சியா (Wang Yanxia) என்ற பெண் அதைப் பற்றி தந்தையிடம் கேட்டார்.

"உன்னிடம் சொல்லி என்ன ஆகியிருக்கும்? பள்ளிக்கு என்னால் கட்டணம் செலுத்தியிருக்கமுடியாது," என்று அவர் சொன்னார்.

'தந்தை ஏன் பொய் சொன்னார்? உண்மையைச் சொல்லியிருந்தால் நான் புரிந்துகொண்டிருப்பேன்,' என்று வாங் கூறினார்.

விளையாட்டாளராகும் கனவைப் பூர்த்திசெய்யமுடியாததை எண்ணி தாம் வருந்துவதாக அவர் சொன்னார்.

வாங்கின் கதையை அறிந்த இணையவாசிகள் பலர் சினம் கொண்டனர்.

'வாங்கின் தந்தை கடிதத்தை மட்டும் மறைக்கவில்லை மகளின் எதிர்காலத்தையும் மறைத்துவிட்டார்' என்று இணையவாசியகள் சிலர் கூறினர்.

சிலரோ தந்தைக்கு வாங் மீது பாசம் உண்டு என்று தெரிவித்தனர்.

'அவர் நினைத்திருந்தால் கடிதத்தைத் தூக்கி வீசியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை,' என்று அவர்கள் கூறினர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்