Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அணுவாயுதம் இல்லாத உலகத்தை உருவாக்கவேண்டும் - ஜப்பானியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
அணுவாயுதம் இல்லாத உலகத்தை உருவாக்கவேண்டும் - ஜப்பானியப் பிரதமர்

(படம்: JIJI PRESS / AFP)

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) அணுவாயுதம் இல்லாத உலகத்தை உருவாக்கும்படி அறைகூவல் விடுத்துள்ளார்.

ஹிரோஷிமாவில் அவர் பேசினார். 

அங்குள்ள அமைதி நினைவுப் பூங்காவில் உள்ளூர் நேரப்படி காலை எட்டே கால் மணிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி அதே நேரத்தில்தான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டுத் தாக்குதலை நடத்தியது.

அதனை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்ச்சியில் 98 நாடுகள் கலந்துகொண்டன.

ரஷ்யாவும் அதன் நட்பு நாடான பெலரூசும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa