ஜப்பானில் கவிழ்ந்த சரக்குக் கப்பல் - நால்வர் மீட்பு, 18 பேரைக் காணவில்லை

(படம்: Handout / KOREA COAST GUARD / AFP)
ஜப்பானின் தென்மேற்கில் உள்ள நாகசாக்கி (Nagasaki) வட்டாரத்திற்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்துவிட்டது.
அதில் 22 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
4 கப்பல் ஊழியர்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் இன்னும் 18 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கைச் சேர்ந்த சரக்குக் கப்பல் இன்று அதிகாலையில் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் உள்ளூர் நேரப்படி சுமார் பதினொன்றே கால் மணி அளவில் உதவி கோரி அழைப்பு வந்தது.
மீட்புப் பணிகளில் ஒரு விமானமும் 2 கப்பல்களும் உதவிவருகின்றன.
சரக்குக் கப்பல் ஏன் கவிழ்ந்தது என்று இன்னும் தெரியவில்லை.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடுங்குளிரால் சில பகுதிகளில் கனத்த பனிமழை பொழிகிறது.
கப்பல் கவிழ்ந்த இடத்திற்கு அருகே உள்ள தீவுகளில் தட்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்திருக்கிறது.