ஹாங்காங்கில் பெருகிவரும் கிருமித்தொற்றுக் குழுமத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சி

(படம்: AFP)
ஹாங்காங்கில் வேகமாகப் பெருகிவரும் கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்றை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இன்றுமுதல் பொது வீடமைப்பு கட்டடமொன்றில் வசிக்கும் 2,500 குடியிருப்பார்கள் 3 நாள்களுக்கு அன்றாடக் கிருமித்தொற்றுப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
கிருமிப்பரவல் இல்லை என்பது பரிசோதனை முடிவுகளில் உறுதியானால்தான் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியும்.
ஓமக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவர், கட்டடத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதலில் இருவருக்கு நோய்த்தொற்று உறுதிசெயப்பட்டது.
ஆனால் ஒரே நாளில் 16 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.