ஹாங்காங் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிமுறையைத் தளர்த்தவுள்ளது

(கோப்புப் படம்: AP Photo/Kin Cheung)
வெளிநாட்டுப் பயணிகள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை வரும் திங்கட்கிழமையிலிருந்து (26 செப்டம்பர்) தளர்த்துவதாக ஹாங்காங் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் கட்டுப்பாடுகளை முறையாகத் தளர்த்துவதை விரும்புவதாகத் தலைமை நிர்வாகி ஜான் லீ (John Lee) கூறினார்.
தற்போது ஹாங்காங் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் 3 நாள்களுக்கு ஹோட்டலில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அவர்கள் 4 நாள்களுக்குத் தங்கள் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.
இதற்கிடையே பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் 12 வயதும் அதற்கும் மேற்பட்டோரும் உணவகங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றினுள் நுழையத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
-Reuters