Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினருக்கு COVID-19 - சீன அதிபருடன் படம் எடுத்த பின்னர்...

வாசிப்புநேரம் -

சீன அதிபர் சி சின்பிங் இவ்வாரம் ஹாங்காங் சென்றிருந்தபோது அவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொண்ட ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 100 அதிகாரிகள் திரு. சியுடன் குழுவாகப் படம் எடுத்துக்கொண்டனர்.

அப்போது 42 வயது ஸ்டீவன் ஹோ அதிபருக்கு நேரடியாக இரு வரிசைகள் பின்னால் நின்றார்.

சென்ற வியாழக்கிழமை (ஜூன் 30), ஹாங்காங் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிக்கத் திரு. சி ஹாங்காங்கிற்குச் சென்றிருந்தார்.

அன்று பரிசோதனையில் திரு. ஹோவிற்கு நோய்த்தொற்று இல்லை என உறுதியானது.

ஆனால் மறுநாள் பரிசோதனை முடிவுகள் தெளிவாக இல்லை என்று அவர் கூறினார்.

அதை அடுத்து, அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

திரு. சி ஹாங்காங்கிற்கு வருகை தந்த வேளையில் கிருமித்தொற்று கண்டறியப்பட்ட 2ஆவது சட்டமன்ற உறுப்பினர் அவர்.

அதிபர் சி சுமார் 900 நாள்களுக்குப் பின்னர் சீனாவிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்