Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகளில் சிலவற்றைத் தளர்த்தியுள்ள ஹாங்காங்

வாசிப்புநேரம் -
COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகளில் சிலவற்றைத் தளர்த்தியுள்ள ஹாங்காங்

(படம்: AFP)

ஹாங்காங் COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகளில் மேலும் சிலவற்றைத் தளர்த்தியுள்ளது. 

சென்ற வாரத்தில் மேலும் சில கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலும் ஹாங்காங் அவ்வாறு செய்துள்ளது. 

தினமும் அங்கே சுமார் 200 முதல் 300 பேரிடம் புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுகிறது.

உட்புற உடற்பயிற்சிக் கூடங்களில் முகக்கவசம் அணியவேண்டிய கட்டாயம் இன்றிலிருந்து அகற்றப்படுகிறது. 

5 மாதங்களாக மூடப்பட்டிருந்த மதுக் கூடங்கள், இசை, நடன விடுதிகள், உடல் பிடிப்பு நிலையங்கள் இன்றிலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளன. 

பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் வருகை தருவர் என்ற எதிர்பார்ப்பில் மதுக்கூட உரிமையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கிருமிப்பரவலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளால் இரவு விடுதி வர்த்தகங்கள் பல மூடப்பட்டுவிட்டன. 

புத்தாக்கத்தோடு வர்த்தகத்தை மாற்றியமைத்துத் தப்பிப் பிழைத்த விடுதிகள் இப்போது புது உற்சாகத்தோடு செயல்படக் காத்திருக்கின்றன.

இன்னும் மேம்பட்ட அரசாங்க ஆதரவுக்கு அவை அழைப்பு விடுத்துள்ளன. 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa