Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குதிரைச் சவாரிசெய்து McDonald's உணவு வாங்கிய பெண்கள்... சமூக ஊடகத்தில் பரவும் காணொளி

வாசிப்புநேரம் -
குதிரைச் சவாரிசெய்து McDonald's உணவு வாங்கிய பெண்கள்... சமூக ஊடகத்தில் பரவும் காணொளி

(படம்: Screenshot/TikTok/@missneoo0)

மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தில் McDonaldsஇன் 'Drive-thru' பகுதியில் சில இளம்பெண்கள் குதிரையில் சென்று உணவு வாங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது.

கோங் பாடாக் (Gong Badak) நகரில் நடந்த அந்தச் சம்பவத்தின் 2 காணொளிகளை missneoo0 என்பவர் TikTokஇல் பதிவிட்டுள்ளார்.

குதிரைகளையும் அதனை ஓட்டிவந்த பெண்களையும் கண்ட பொதுமக்கள் பிரமித்துப்போயினர். McDonalds ஊழியர்களில் சிலரும் அந்த அரிய காட்சியைப் பதிவுசெய்தனர்.

காணொளியை 200,000 க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

குதிரைச் சவாரிசெய்த அவர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இணையவாசிகளில் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

"இரவாகிவிட்டது. ஒருவேளை அந்தக் குதிரைகள் கழிவுகளை வெளியேற்றினால் அது McDonalds ஊழியர்களுக்கும் இதர வாடிக்கையாளர்களும் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தலாம்" என TikTokஐப் பயன்படுத்தும் arelong_zam என்ற ஒருவர் தெரிவித்தார்.

"குதிரைகளுக்கும் துரித உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று மற்றொருவர் வேடிக்கையாகக் கருத்துப் பதிவிட்டிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்