Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானின் முன்னையப் பிரதமர் இம்ரான் கான் மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும்

வாசிப்புநேரம் -

பாகிஸ்தானின் முன்னையப் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு இன்று (22 செப்டம்பர்) கொண்டுவரப்படவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  

அதோடு ஐந்து ஆண்டு வரை அவர் அரசியலில் பங்கேற்கத் தடையும் விதிக்கப்படலாம். 

கடந்த மாதம் அரசியல் கூட்டத்தில் பேசிய திரு. இம்ரான் கான் காவல் துறைக்கும் நீதிபதி ஒருவருக்கும் எதிராக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. 

அதன் பிறகு நடைபெற்ற இரண்டு வழக்கு விசாரணைகளில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரத் தவறியதாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்