பாகிஸ்தானின் முன்னைய பிரதமர் இம்ரான் கான் இன்று ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவிருக்கிறார்

படம்: AFP
பாகிஸ்தானின் முன்னைய பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க இன்று (18 மார்ச்) நீதிமன்றத்தில் தோன்றவிருக்கிறார்.
லாகூர் (Lahore) நீதிமன்றம் அவர்மீதான கைதாணையை நேற்று ரத்துசெய்து, அவர் இஸ்லாமாபாத்தில் இருக்கும் நீதிமன்றத்துக்குச் செல்ல வாய்ப்புத் தந்தது.
திரு. இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமது லாகூர் வீட்டில் ஒளிந்திருக்கிறார்.
தமக்கு விடுக்கப்பட்ட கைதாணையை நீக்கும்படிக் கேட்டு அவர் புறப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் அவரைச் சூழந்துகொண்டனர்.
அவரைக் கைதுசெய்ய பலமுறை முயற்சி செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் அவரது ஆதரவாளர்கள் கோபத்தோடு அதைத் தடுக்கின்றனர்.
கடந்த ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மூலம் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் இவ்வாண்டு பிற்பகுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.