Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோதுமை ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ள இந்தியா

வாசிப்புநேரம் -

இந்தியா கோதுமை ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் இந்தியாவில் கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா விதித்துள்ள தடையால் கோதுமையின் விலை புதிய உச்சத்தை எட்டும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கொளுத்தும் வெயிலின் தாக்கம் கோதுமையின் உற்பத்தியைக் குறைத்துள்ளது. அதோடு உள்நாட்டில் கோதுமையின் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

கோதுமை ஏற்றுமதித் தடைக்கு முன், இந்தியா 10 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்ய இலக்கு வைத்திருந்தது.

இந்தத் தடை குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்கப் பயனீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கோதுமை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சந்தைகளில் ஒரு டன் கோதுமை சுமார் 350 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.

அதிகரித்து வரும் எரிபொருள், போக்குவரத்துச் செலவுகளால் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையையும் உயர்த்தியுள்ளன.

ஒட்டுமொத்த விலை உயர்வு பணவீக்கத்தைப் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது என்றும் அதனால்தான் கோதுமை ஏற்றுமதியை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது என்றும் மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்