Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மாவு ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தும் இந்தியா

வாசிப்புநேரம் -

இந்தியா உலகளவில் இடம்பெறும் கோதுமை நெருக்கடியிலிருந்து உள்நாட்டுச் சந்தைகளைப் பாதுகாக்க அதன் மாவு ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

அனைத்துலகத் தட்டுப்பாடுகளையும் உயரும் விலைகளையும் சமாளிக்கவும்,  தேசிய உணவு இருப்புகளைப் பாதுகாக்கவும் சென்ற மாதம் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிகள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டன. 

அனைத்துலக அளவிலான கோதுமை விநியோகத் தடைகளால் விலையில் நிலைப்பாடு குறைந்துள்ளது என்றும் கோதுமைத் தரத்தில் சிக்கல்கள் எழலாம் என்றும் கூறப்படுகிறது. 

ஆகவே இந்தியாவின் கோதுமை ஏற்றுமதிகளின் தரத்தைக் கட்டிக்காப்பது முக்கியம் என்று கருதப்படுகிறது.

உலகில் ஆகப்பெரிய கோதுமை உற்பத்தி நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்