Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் இந்தியா

வாசிப்புநேரம் -
COVID-19 பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் இந்தியா

(படம்: Punit PARANJPE / AFP)

இந்திய அரசாங்கம் COVID-19 அவசரத் தேவையுள்ள இடங்களைக் கண்டறிந்து பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2022) செப்டம்பருக்குப் பிறகு இந்தியாவில் புதிதாக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (7 ஏப்ரல்) மட்டும் புதிதாக ஆறாயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

சென்ற மாத இறுதியில் நாள்தோறும் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை ஈராயிரமாக இருந்தது.

திடீரென அது இரு மடங்கு உயர்ந்துள்ளது.

மரபணுச் சோதனைகளைத் துரிதப்படுத்தி, பாவனைப் பயிற்சிகளை மேற்கொள்ளும்படி மருத்துவமனைகளுக்குச் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதிதாகப் பாதிக்கப்படுவோரிடம் ஓமக்ரான் XBB ரகக் கிருமியின் பாதிப்பு அதிகம் தென்படுகிறது.

இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் அல்லது மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சான்று ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மூவாண்டுக்கு முன்னர் நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் 44.5 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் நோய்த்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் முதல் இரண்டு நிலைகளில் உள்ளன.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்