Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் வெள்ளம் - கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர்

வாசிப்புநேரம் -
இந்தியாவில் வெள்ளம் - கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர்

(படம்: AFP/Biju Boro)

இந்தியாவின் அஸ்ஸாம் வட்டாரத்தில் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான இடங்களிலிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு உதவத் தேடல் மீட்புப் பணியாளர்கள் முயற்சி செய்கின்றனர்.

இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தது 100 பேர் மாண்டனர்.

உயர்த்தப்பட்ட கரைகளில் கட்டப்பட்ட தற்காலிகத் தங்குமிடங்களில் பலர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சில குடும்பங்கள், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இருப்பினும் ஒட்டுமொத்த நிலைமை சற்று மேம்பட்டிருப்பதாக அஸ்ஸாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 400,000 பேர் வீடுகளுக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 31இலிருந்து 29க்குக் குறைந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa