Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 4 மாதங்களில் மூன்றாம் முறை அதிகரிக்கப்பட்டுள்ள கடன் வட்டி விகிதம்

வாசிப்புநேரம் -

இந்திய மத்திய வங்கி அதன் கடன் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. 

அங்கு 4 மாதங்களில் கடன் வட்டி விகிதம் மூன்றாம் முறையாக அதிகரிக்கப்படுகிறது. வர்த்தகப் பற்றாக்குறை, பலவீனம் அடையும் இந்திய நாணயம் ஆகியவையே அதற்குக் காரணங்கள் என்று கூறப்பட்டது. 

இந்திய மத்திய வங்கி அதன் முக்கியக் கடன் விகிதத்தை அரை விழுக்காட்டுப் புள்ளி கூட்டி 5.4 விழுக்காட்டுக்கு உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காணப்பட்ட உச்சம் அது.  

கோவிட் நோய்ப்பரவல் சூழலிலிருந்து மிக விரைவில் மீண்டுவந்த இந்தியாவில் தற்போது பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன. அதனால் செலவுகளும் கூடிக்கொண்டேபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்