Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம்

வாசிப்புநேரம் -
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (19 செப்டம்பர்) புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் இப்போது 800 உறுப்பினர்கள்வரை அமர இட வசதியுள்ளது.

இதுவரை இந்திய நாடாளுமன்றம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது கட்டப்பட்ட வட்ட வடிவக் கட்டடத்தில் இயங்கிவந்தது.

பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்துக்கு நடந்து செல்லுமுன், மத்திய மண்டபத்தில் சில சடங்குகள் இடம்பெற்றன.

அப்போது பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா இப்போது புத்துணர்வுடன் விழித்தெழுந்துள்ளது" எனக் கூறினார்.

இன்றைய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்களுக்கு 33 விழுக்காட்டு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

அது அங்கீகரிக்கப்பட்டால், இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

மேலவை, கீழவை இரண்டிலும் உள்ள மொத்தம் 788 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இப்போது 104 பேர் மட்டுமே பெண்கள்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்