Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துகிறது இந்தியா

வாசிப்புநேரம் -
சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துகிறது இந்தியா

Pixabay

இந்தியா அதன் சர்க்கரை ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு அளவில் விலை அதிகரிப்பைத் தடுப்பதற்காக அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்க அதிகாரி ஒருவர் Reuters-இடம் கூறினார்.

இந்தியா 10 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறது.

இதற்கு முன்னர் ஏற்றுமதிகளை 8 மில்லியன் டன்னுக்குக் கட்டுப்படுத்த அந்நாடு எண்ணியது.

இருப்பினும் உள்நாட்டில் கூடுதல் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் என்று கணிக்கப்பட்டதால் உலக நாடுகளுக்குச் சற்று அதிகமான சர்க்கரை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு  6 மில்லியன் டன் சர்க்கரை இருக்கும்.

அது நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானது என்று கூறப்பட்டது.

உலகின் ஆகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடு இந்தியா.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதி நாடும் அதுவே.
 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்