Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: மேற்கு வங்க ரயில் விபத்து - மாண்டோர் எண்ணிக்கை 9க்கு அதிகரிப்பு

வாசிப்புநேரம் -
இந்தியா: மேற்கு வங்க ரயில் விபத்து - மாண்டோர் எண்ணிக்கை 9க்கு அதிகரிப்பு

படம்: AFP

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் நேர்ந்த ரயில் விபத்தில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 9க்கு அதிகரித்துள்ளது. 

அசாம் மாநிலத்துக்குச் சென்றுகொண்டிருந்த ரயில் நேற்றிரவு தடம்புரண்டது. 

ரயிலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

ரயில் பெட்டிகளில் பலர் இன்னமும் சிக்கியுள்ளனர். 

ஆனால் அவர்களை மீட்க பாரந்தூக்கிகளின் உதவி தேவைப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

தேசியப் பேரிடர் மீட்புப் படை அவர்களை மீட்க முயன்றுவருகிறது. 

அதற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. 

விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. 3 பெட்டிகள் தலைகீழாகப் புரண்டன. 

36 பேர் காயமுற்றதாகவும் அவர்களில் 10 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாண்டோர் குடும்பங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்றும் அவர்கள் கூறினர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa