Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெப்ப அலையால் கோதுமை உற்பத்தியில் தடங்கல் - இந்தியா எதிர்நோக்கும் சிக்கல்

வாசிப்புநேரம் -

இந்தியாவில் தொடரும் மோசமான வெப்ப அலையால் கோதுமையின் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

கோதுமையின் ஏற்றுமதியை அதிகரிக்க எண்ணும் இந்தியா அதனால் சிக்கலை எதிர்நோக்குகிறது.

உள்நாட்டுத் தேவைகளிலும் வெளிநாட்டு ஏற்றுமதிகளிலும் சமநிலையைக் காண்பது சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகின் ஆகப் பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, பொதுவாக அதன் உற்பத்தியில் சிறிய பகுதியை மட்டுமே ஏற்றுமதி செய்யும்.

முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடான உக்ரேனில் போர் தொடர்வதால், உலகளவில் கோதுமைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

அதை சாதகமாகப் பயன்படுத்தி, இந்தியா அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்கத் திட்டமிட்டது.

உலகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய அது 25 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்யவேண்டும்.

இருப்பினும், அண்மை வாரங்களாக நீடிக்கும் வெப்ப அலை அதில் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.

சில நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

குறிப்பாக மார்ச் மாதத்தில் நிலவிய வெப்பம், 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான ஆகச் சூடான காலம். அது உற்பத்தியைப் பாதித்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் கோதுமை இருப்பு, கிருமிப்பரவல் சூழலில் நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்ட இலவச விநியோகத்தால் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, ஏற்றுமதிகள் அதிகரிக்கும் நிலையில், கோதுமைக்கான உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது சிரமமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்