Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரஷ்யப் போரால் இந்தியாவில் வைரம் பட்டை தீட்டும் வேலையை இழந்த பல்லாயிரம் பேர்

வாசிப்புநேரம் -
ரஷ்யப் போரால் இந்தியாவில் வைரம் பட்டை தீட்டும் வேலையை இழந்த பல்லாயிரம் பேர்

 (Photo: AFP/File/SAM PANTHAKY)


ரஷ்யா, உக்ரேன் மீது தொடுத்திருக்கும் போரால் இந்தியாவில் வைரத்தைப் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரம் ஊழியர்கள் வேலை இழந்துவிட்டனர். 

தொடர்பற்ற ஒரு செய்தி போல் தோன்றினாலும், இந்தியாவில் சுமார் 250,000 பேர் இதனால் வேலை இழந்திருப்பது உண்மை. 

ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்திருக்கும் தடையால் வைர விநியோகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

உலகில் ஆபரணத்துக்குத் தயாராகும் 90 விழுக்காட்டு வைரத்தைப் பட்டை தீட்டும் வேலை இந்தியாவில் நடக்கிறது. 

இந்தியா இறக்குமதி செய்யும் வைரத்தில் பெரும்பகுதி ரஷ்ய வைரச் சுரங்களிலிருந்து வருகின்றது. 

ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்டு இந்தியாவில் பட்டை தீட்டப்படும் வைரங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வாங்க மறுக்கின்றன.  

இந்தியாவில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் குஜராத். 

பட்டை தீட்டும் நிறுவனங்கள் வைரத்தை விற்க முடியாததால், பணப்புழக்கம் குறைந்திருக்கிறது. அடுத்தடுத்த விநியோகத்தையும் அது பாதித்துள்ளது. 

மேற்கத்திய நாடுகளின் தடையால் ரஷ்யா SWIFT எனும் நாடுகளுக்கு இடையில் கட்டணம் செலுத்தும் முறையிலிருந்து நீக்கப்பட்டது.  அப்போதுமுதல் ரஷ்யாவிலிருந்து தருவிக்கப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாய் இந்திய வியாபாரிகள் கூறுகின்றனர். 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்