Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆண்களே... மாதவிடாய் வலி எப்படி இருக்கும் எனத் தெரியுமா?

வாசிப்புநேரம் -

உலகில் பல பெண்கள் மாதந்தோறும் அனுபவிக்கும் மாதவிடாய் வலி...

அந்த வலியில் 10 விழுக்காட்டை அனுபவிக்க இந்திய ஆண்களுக்கு ஒரு வாய்ப்பளித்தார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடன் (Hibi Eden).

அதற்கான பாவனைப் பயிற்சிக் கருவிகளை அவர் கடைத்தொகுதிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கொண்டுசென்றார்.

மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டும் என்பதே அதன் நோக்கம். 

BBC செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது. 

அந்தக் கருவிகளைப் பயன்படுத்திய ஆண்கள் 10 விழுக்காட்டு வலியிலேயே கதறினர்...

'Feel the Pain' அதாவது 'வலியை உணருங்கள்' என்கிற அந்தத் திட்டம் menstrual cup என்ற மாதவிடாய்ப் பொருளையும் இலவசமாக வழங்கியது.

திட்டம் 24 மணி நேரத்தில் 100,000 மாதவிடாய்ப் பொருள்களை நன்கொடையாக வழங்கி கின்னஸ் உலகச் சாதனை படைத்ததாக BBC கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்