Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

38 ஆண்டுகளுக்குமுன் பாகிஸ்தான் எல்லையில் காணாமற்போன இந்திய வீரரின் சடலம் கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 38 ஆண்டுகளுக்குமுன் காணாமற்போன இந்திய வீரர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவு வீரரின் சடலத்தைக் காட்டும் படத்தை Twitter-இல் வெளியிட்டிருந்தது. 

சந்திரசேகர் என்ற பெயர் கொண்ட அந்த வீரர் 1984ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரில் திட்டப்பணி ஒன்றில் நியமிக்கப்பட்டவர். 

சியாசென் (Siachen) எனும் பனிப்பாறையின் கட்டுப்பாட்டை நிலைநாட்ட அந்தச் சண்டை நடந்தது. அது உலகில் போர் நடக்கும் இடங்களில் ஆக உயரமானது என்ற பெயர் பெற்றது. 

18,000 அடி உயரத்தில் உறைநிலைக்குக்கீழ் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய தட்பநிலையில் கடுமையான சூழலில் அங்கு ராணுவ வீரர்கள் போர் புரிவர். 

இமயமலையின் லடாக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கோரும் இடம் அது. 

அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 20 பேர் அடங்கிய குழுவில் திரு சந்திரசேகரும் இருந்தார்.

அப்போது அங்கு ஏற்பட்ட பனிப்புயலில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 15 பேரின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. 

காணாமற்போன ஐவரில் சந்திரசேகரும் ஒருவர். 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு இடம்பெறும். 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்